ஞாயிறு, 6 டிசம்பர், 2009

டிஸம்பர் - 6

டிஸம்பர் - 6 வந்தாலே நம்மிடம்
இறையில்லச் சிந்தனை வந்து
நம்மிடம் ஒரு சோகம்
நம்மை அறியாமல் வந்து சேரும்.
இது சுதந்திர இந்தியாவில் நடந்த
கேவலம் என்றால் மிகையல்ல.
இன்றைய தினத்தில்
ஏராளனமான நமது அமைப்புகள்,
ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும்,
கையெழுத்து வேட்டையும்,
கண்டன போஸ்டர்களும் என
தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

இதை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.
இறைவனை தொழக்கூடிய ஆலயங்கள்
இடிப்பதை கண்டிக்காமல் இருக்கமுடியாது.
அதை மீட்கவும் முயற்சிகள் தொடரவேண்டும்...

ஆனால் இங்கே சில சிந்தனைகள் சொல்லவேண்டும்
இறைவனின் இல்லத்திலிருந்து
தினமும் ஐந்து நேரம் இறைவனை வணங்குவதற்காக
அழைப்புகள் வந்து கொண்டே
இருந்தது.. இருக்கிறது..இருக்கும்..
அந்த அழைப்பை காதில் வாங்கி கொள்ளாமல்
எருமைமாட்டின் மேலே
மழை பெய்த மாதிரி சென்றுவிட்டு
இடித்தபின் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்வது
எந்த விதத்தில் நியாயம்?!
அந்த ஒரு தினத்தில் கூடி
தமது உணர்வை வெளிப்படுத்துவது
எந்த விதத்தில் நியாயம்..?!
எங்கே அல்லாஹ்வின் நல்லடியார்களே
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..
இறை இல்லத்தில் இருந்து வரக்கூடிய அழைப்பை
ஏதோ மோதினாரின் அழைப்பு என கருதாமல்
இறைவனை வணங்க பள்ளிக்கு செல்லுங்கள்
தொழுகையால் இறைஇல்லத்தை அலங்கரியுங்கள்.
'மூமினான ஆண்களுக்கும்
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில்
தொழுகை கட்டாய கடமையாகும்.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக