சனி, 17 அக்டோபர், 2009

உங்கள் சிந்தனைக்கு!

இன்று நமது சமுதாயம்
அல்லாஹ் மட்டும் வணங்காமல்
தனக்கு ஒரு கஷ்டங்கள் வந்தால்
தனக்கு ஒரு நோய் வந்தால்
உடனே நேர்ச்சைகள் பலவாறு செய்து
பல ஊர்களுக்கு பிரயாணம் செய்து
பல தர்ஹாக்களிள் வேண்டுவதை பார்க்கிறோம்.
இது போல கஷ்டங்கள்
வந்தால் நாம் பொறுமையைத்தான் கடை பிடிக்க வேண்டும்
என நமக்கு நமது இஸ்லாம் போதிக்கிறது.

(இறை நம்பிக்கையாளர்களே!)
உங்களை ஓரளவு பயத்தாலும் பசியாலும், பொருட்கள்,
உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பாலும்
நிச்சயமாக சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு
( நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக. (அல் குர் ஆன் 2;155)

ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை,
துக்கம், அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை,
அவை அனைத்தையும் கொண்டு அவரது பிழைகளை அல்லாஹ்
அழிக்காமல் விடுவதில்லை.
அறிவிப்பாளர் ; அபூஹுரைரா (ரலி)
நூல் புகாரி

1 கருத்து:

  1. உங்களுக்கு நோய் இருந்தால் டாக்டர்கிட்ட போகாதீங்க அல்லாஹ் கிட்ட மட்டும் கேளுங்க

    பதிலளிநீக்கு