வெள்ளி, 27 நவம்பர், 2009

அனைவருக்கும்
இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

முரீது வாங்க வேண்டுமா?!

http://ensabai.blogspot.com

சகோதரர்களே! சவூதிஅரேபியாவிலிருந்து சகோதரர் அனுப்பித்தந்த செய்தியினை இங்கே உங்களுக்காக பதிவு செய்கிறேன். இது குறித்து உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்).


பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர். 'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.

இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள். இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள். இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)


இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.
ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே! எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம். இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.


இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும். அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

வலைத்தளம் செல்ல

http://ensabai.blogspot.com

திங்கள், 23 நவம்பர், 2009

பாவம் பொருத்தருள...

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவர்

"அஸ்த;.க் ;.பிருல்லாஹல் அழீமல்லதீ லாயிலாஹ
இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூமு வ அதூபு இலைஹி"


என்று கூறுகிறாரோ, அவர் போர்க்களத்திலிருந்து
வெருண்டு ஓடியிருப்பினும் அவருக்காக அல்லாஹ்
பாவம் பொருத்தருளுகிறான் என்று கூறினார்கள்..

நூல்கள்; அபூதாவூது, திர்மிதீ, ஹாகிம்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்

பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்
ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து..

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது...

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்...

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன், நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்...

''பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்...

''பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்...

''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக!

சனி, 14 நவம்பர், 2009

'பீடி மஸ்தான் வலியுல்லாஹ்'...

தர்ஹாக்கள் பார்க்கலாம்





அடியார்க்கு அருள் செய்யும் அம்மா
அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா..
இதான் பீமா பள்ளி திருவனந்தபுரத்தில் இருக்கிறது.




இதற்கு பக்கத்தில் தான் இருப்பது
ஒரு அவ்லியாவின் தர்ஹா.
அவ்லியா பெயர் 'பீடி மஸ்தான் வலியுல்லாஹ்'
இதற்கு பீடியும் , பத்தியும், வாங்கி தான் பாத்திஹா ஓத வேண்டும்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

குர்பானி சிறப்பும் செய்முறைகளும்

அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தையும், சிறப்பையும் பெற்ற,
தியாகச் செம்மல் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின்
தியாகத்தை நினைத்துப் பார்த்து நாமும் படைத்த இறைவனுக்காக
ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அல்லாஹ்விற்கு அர்பணித்து
ஏழை எளியவர்களுக்கு கொடுத்து மகிழும் மகத்தான ஒரு வழிபாடுதான் குர்பானி.
இறையச்சம் ஒன்றை மட்டுமே இலட்சியமாக கொண்டு செயல்படும் வழிபாடகும்.

"குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.
எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது. (அல்குர் ஆன் 22;37)"

*குர்பானி ஹஜ்ஜுப் பெருனாள் தொழுகை தொழுத பின்னர்தான் கொடுக்கப்படவேண்டும்
*குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப நாள் முதல்
குர்பானி கொடுக்கும் வரை நகம் ,முடி, எதையும் களையக்கூடாது.
*குர்பானி பிராணி நல்ல கொழுத்ததாகவும், குறையில்லாததாகவும் இருக்கவேண்டும்.
*குர்பானி கொடுக்கும் பிராணி கொம்புடையதாக இருப்பது நல்லது.
*குர்பானி பிராணியை கொடுப்பவர் அறுப்பது சிறந்தது.
*பிராணியை அறுக்கும்போது ' பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்
என்று கூறவேண்டும்.
*குர்பானியை ஹஜ்ஜுப் பெருனாள் அன்றும், அதைத் தொடர்ந்து வரும்
மூன்று நாட்களிலும் கொடுக்கலாம்.
*இறைச்சியை இத்தனை பங்குதான் வைக்கவேண்டும்
என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
*தோலை ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
*குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்துத் தான்
அறுக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது.
*குர்பானி மாமிசத்தை அண்டை வீட்டு மாற்று மதத்தவர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை
* தோலை உரித்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது

சனி, 7 நவம்பர், 2009

உணவை உண்டு முடித்தபின் து ஆ



அல்ஹம்து லில்லாஹில்லதீ அத் அமனீ
ஹாதா வரஜகனீஹி, மின் ;.கைரி ஹவ்லின்
மின்னீ வலா குவ்வதின்

என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என் பலமின்றி
எனக்கு இதை உண்ணக்கொடுத்து, அதை வழங்கவும்
செய்தவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகுக!

நூல்; அபூதாவுது, இப்னுமாஜா

மழை தொடரும் நாட்களில்

மழை தொடரும் நாட்களில் ( நினைவிற்காக)
நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்

காற்று புயல் வீசுகின்ற போது

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக கைரஹா,
வ அஊது பிக மின் ஷர்ரிஹா.

யா அல்லாஹ் நிச்சயமாக அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்.
அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன்.
நூல்கள் : அபூதாவுது, இப்னுமாஜா

இடி இடிக்கின்ற போது

ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ர;.து பிஹம்திஹி
வல் மலாயிகத்து மின் கீ;.பதிஹி

அவன் தூயவன் அவன் எத்தகையவனென்றால்
அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது.
மற்றும் மலக்குகள் அவனது பயத்தால் துதிக்கின்றனர்.
நூல் ; முஅத்தா.




மழை பெய்து விடும்போது

அல்லாஹும்ம ஸய்யிபன் நா;.பிஅன்

பயன் தரக்கூடிய மழையாக யாஅல்லாஹ் நீ ஆக்கி வைப்பாயாக!
நூல்; புகாரி

மழை பெய்த பிறகு

முதிர்னா பி ;.பளில்லாஹி வரஹ்மதிஹி

அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனது அருளால்
நாங்கள் மழை பெற்றோம்.
நூல் ; புகாரி