சனி, 26 டிசம்பர், 2009

முஹர்ரம் மாதம் நோன்பு

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்:

"ரமளானுக்குப்பின் நோன்புகளில் மிகச்சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான
முஹர்ரம் மாதம் நோன்புதான். கடமையான தொழுகைக்குப்பின்
தொழுகையில் மிகச்சிறந்தது, இரவுத் தொழுகை(தஹஜ்ஜத்) தான்"
என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)


அபூ கதாத (ரழி) அறிவிக்கின்றார்கள்:

ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது பற்றி
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள்
"அந் நாளில் நோன்பு வைப்பது, அதற்கு முன் சென்ற வருடத்தின்
பாவங்களை அழிக்கிறது" என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம்)

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஆசி வழங்கும் அம்மா!

தனி மனித வழிபாட்டை வன்மையாக மறுக்கும் மார்க்கம் இஸ்லாம்! தனக்காக பிறர் எழுந்திருப்பதைக் கூட அனுமதிக்கவில்லை உத்தம நபி (ஸல்). அப்பேர் பட்ட மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் என்று கூறிக் கொண்டு சில பெயர் தாங்கிகள் புரியும் அட்டூளியம் பாரீர்!

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்! உச்சரிப்பு தவறினாலும் உணர்ச்சியுடன் பாடும் சந்நியாசிகள்.

எரியும் விளக்கில் விழும் விட்டில்கள் போல் அம்மா முகத்தில் விழும் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள்! தொப்பி தாடி வைத்த பெரியவர்! மாலையிட்டு முத்த ஆசி வாங்கும் அரபி!

முஸ்லிம்களில் ஷிர்க் இல்லை, தவ்ஹீத் வாதிகள் பிரிவினை வாதிகள், தவ்ஹீத் பிரச்சாரம் பிரிவினைப் பிரச்சாரம் என்று கூப்பாடு போடுபவர்கள் எங்கே? பாபரிப் பள்ளிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் ஆர்ப்பாடி ஆர்ப்பரித்து இயக்கம் வளர்க்கும் வீரர்கள் எங்கே?

சொந்தம் சமூகத்தில் புரையோடியிருக்கும் இணைவைப்புக்கு கொள்கைக்கு எதிராக கேரளாவில் ஒலிக்கும் குரல்கள் தமிழகத்தில் ஏன் ஓய்ந்து விட்டன?!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் முஷ்ரிக்குகளுடன் கலந்து விடும் வரையிலும், என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் சிலைவணக்கத்தில் ஈடுபடும் வரையிலும் மறுமை நாள் ஏற்படாது''

http://abooabdu.blogspot.com/2009/12/blog-post.html

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

டிஸம்பர் - 6

டிஸம்பர் - 6 வந்தாலே நம்மிடம்
இறையில்லச் சிந்தனை வந்து
நம்மிடம் ஒரு சோகம்
நம்மை அறியாமல் வந்து சேரும்.
இது சுதந்திர இந்தியாவில் நடந்த
கேவலம் என்றால் மிகையல்ல.
இன்றைய தினத்தில்
ஏராளனமான நமது அமைப்புகள்,
ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும்,
கையெழுத்து வேட்டையும்,
கண்டன போஸ்டர்களும் என
தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

இதை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.
இறைவனை தொழக்கூடிய ஆலயங்கள்
இடிப்பதை கண்டிக்காமல் இருக்கமுடியாது.
அதை மீட்கவும் முயற்சிகள் தொடரவேண்டும்...

ஆனால் இங்கே சில சிந்தனைகள் சொல்லவேண்டும்
இறைவனின் இல்லத்திலிருந்து
தினமும் ஐந்து நேரம் இறைவனை வணங்குவதற்காக
அழைப்புகள் வந்து கொண்டே
இருந்தது.. இருக்கிறது..இருக்கும்..
அந்த அழைப்பை காதில் வாங்கி கொள்ளாமல்
எருமைமாட்டின் மேலே
மழை பெய்த மாதிரி சென்றுவிட்டு
இடித்தபின் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்வது
எந்த விதத்தில் நியாயம்?!
அந்த ஒரு தினத்தில் கூடி
தமது உணர்வை வெளிப்படுத்துவது
எந்த விதத்தில் நியாயம்..?!
எங்கே அல்லாஹ்வின் நல்லடியார்களே
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..
இறை இல்லத்தில் இருந்து வரக்கூடிய அழைப்பை
ஏதோ மோதினாரின் அழைப்பு என கருதாமல்
இறைவனை வணங்க பள்ளிக்கு செல்லுங்கள்
தொழுகையால் இறைஇல்லத்தை அலங்கரியுங்கள்.
'மூமினான ஆண்களுக்கும்
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில்
தொழுகை கட்டாய கடமையாகும்.'